திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அருள்செல்வம் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 4 நாள்களுக்கு முன் மாணவிகளையும் பெண் பேராசிரியைகளையும் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் இணைந்து காவல் துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்காவுக்கு புகார் அளித்தனர்.
மேலும் முதல்வரின் தனிப் பிரிவு மாவட்ட நிர்வாகம் மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆகியோருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து எரியோடு போலீசார் மற்றும் மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் குணசேகரன் ஆகியோர் புகார் அளித்த மாணவிகள், பெண் பேராசிரியைகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அனைவரும் பேராசிரியர் அருள்செல்வம் மீதான புகார்களை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து விசாரணையின் முடிவில் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கீதா புகாரில் சிக்கிய பேராசிரியர் அருள் செல்வத்தை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த கல்லூரியில் தொடர்ச்சியாக பெண் ஆசியர்கள் ஐந்து பேர் சேர்ந்து கொண்டு தமிழ் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாணவிகளை வைத்து புகார் அளிப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் பேராசிரியர் பாலா என்பவர் மீதும் இதே புகார் தான் அளித்தார் தற்போதும் அருள்செல்வம் மீதும் இதே புகார் அளிக்கிறார்கள் எனவே பெண் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி பணி நீக்கம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா