மதுரை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் சார்பாக, தாலுகாா அலுவலகம் உள்ளிட்ட
அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக, அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை வாடிப்பட்டி வட்டக்கிளை தலைவர் சூசை
நாதன் தலைமை தாங்கி, தொடக்கி வைத்தார் . இதில் , நிர்வாகிகள் மாவட்ட
துணைத் தலைவர் மகேந்திரன், வட்டக்கிளை செயலாளர் திருச்செந்தில் ராஜா, வட்டக்கிளை இணைச் செயலாளர் ஆனந்த், வட்டக்கிளை துணைத் தலைவர் சந்திரா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக்ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றி, மகளிர் துணைக் குழு உறுப்பினர் முருகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி