திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், தாட்கோ செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரியும் பால்ராஜ்(59). என்பவருக்கும் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த கணபதி மகன் ஸ்டாலின்(45). என்பவருக்கும் இடையே உள்ள முன் விரோதம் காரணமாக (14.10.2024)-ஆம் தேதி பால்ராஜ் வேலை செய்யும் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தியதாக (18.10.20240) ஆம் தேதி பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் ஆய்வாளர், ஹரிஹரன் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர், சாகுல் ஹமீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்