திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, காந்திநகர் முனியாண்டி கோவில், தெருவை சேர்ந்த விவேகானந்தன். இவர்,தேனியில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததை தொடர்ந்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செயது விவேகானந்தன் வீட்டில் சோதனையை தொடங்கினர், வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் அங்குலம், அங்குலமாக சோதனையிடப்பட்டது. மேலும் பீரோக்களை திறந்து போலீசார் சோதனையிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை, மாலை 6.40 மணி வரை நடந்தது . திண்டுக்கல்லில் நீண்டகாலமாக பணிபுரிந்த விவேகானந்தன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் பணிமாறுதலில் தேனிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.