சிவகங்கை: காரைக்குடி அருகே நாச்சியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்பங்குடி பாலம் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் நாச்சியாபுரம் காவல் நிலையம் உட்பட்ட கும்பங்குடி பாலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். விபத்து ஏற்பட்ட இடத்துக்கு 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















