திருநெல்வேலி : பாப்பாக்குடியை சேர்ந்த செல்வசூர்யா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார் கடந்த 26-ம் தேதி பள்ளியில் செல்வசூர்யாவுக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் இடையே , திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் அந்த மூன்று மாணவர்கள், செல்வசூர்யாவை, பலமாக தலையில் தாக்கினர். பாப்பாக்குடி காவலர் இதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி, 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். காயமடைந்த செல்வ சூர்யா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பாப்பாக்குடி காவலர் மாணவர்கள், மீது வழக்குப்பதிவு செய்து இருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்தனர். இதனால் அந்த மூன்று மாணவர்களையும் கைது செய்ய அவர்களது, குடும்பத்தினர் உறவினர், மறியலில் ஈடுபட முயன்றனர். காவலர் அதைத்தவிர்த்து 3 மாணவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் , மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள், இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.