திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட புலிக்குளம் பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் இறால் குட்டை அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான பாசன கால்வாய் செய்து இறால் குட்டை அமைத்து இருப்பதாகவும் இது குறித்து அதே பகுதியை சேர்ந்த இந்திரேஷ் பாபு என்பவர் அரசுக்கு சொந்தமான இடத்திலும் மண்ணை எடுத்து தனக்கு சொந்தமான பட்டா நிலத்திலும் மண்ணை எடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக கூறி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பு நிறம் அடைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குரிய இடத்தில் நில அளவை செய்து அங்கு மரக்கட்டைகளால் அளந்து இடத்தை அது காண்பிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு பிறகு அந்த இடத்தில் மரக்கட்டைகளை அகற்றி மணலை எடுத்து வேறு ஒரு இடத்திற்கு மணலை திருடி சென்றுள்ளனர். இது குறித்து இந்திரேஷ் பாபு சார்பில் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியும், அந்த இடத்தில் இறால் பண்ணைகளில் வரும் வெளியேறும் கழிவுகளை அருகாமையில் நிலங்களில் வெளியேற்றி வருவதாகவும் கூறி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது. காரசாரமாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விரைவில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொன்னேரி பொறுப்பு கோட்டாட்சியர் பதில் தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு