திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மீஞ்சூர் – காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இங்கு அமைந்துள்ள ரயில்வே கேட்டில் உயரமும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறைக்கப்பட்டதால் இருசக்கர வாகனங்களும் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் கேட்டிற்குள் புகுந்து கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி அரசியல் கட்சியினர் கூட்டமைப்பினர் ரயில்வே துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். விரைவில் சுரங்க பணிகளை தொடங்காவிடில் அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம் என அப்போது எச்சரித்தனர். இதில் இந்திய கம்யுனிஸ்ட் மார்க்சிய கம்யுனிஸ்ட் இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கம் மனித நேய ஜனநாயக கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட கலர் திரளாக கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு