திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு வந்த தகவலின் அடிப்படையில் மாநகர் நல அலுவலர்(பொறுப்பு) செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேலு, கேசவன், செல்வராணி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 2 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து 2 கடைகளில் இருந்து 320 kg பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா