திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில், காவல் ஆய்வாளர் திருமதி. மகாலட்சுமி , அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில், ஈடுபட்டு கொண்டிருந்த போது, ரோஸ்மியாபுரம் அருகே நான்குசக்கர வாகனத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நாங்குநேரி, தென்னவநேரி பகுதியை சேர்ந்த முத்துசெல்வன் (25), மூலக்கரைப்பட்டி, வடக்கு காடன்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை (27), குலசேகரப்பட்டினம், குமரிகோட்டை, நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெடிலன்(35), ஆகியோரை சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக ரூபாய் 55,680 மதிப்புள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி பணகுடி காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு, 3 பேரையும் (08.07.2022), அன்று கைது செய்தார். மேலும் குற்றவாளிகளிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த ரூபாய் 55,680 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், நான்குசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.