திண்டுக்கல் : திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலை அய்யலூர் மேம்பாலம் அடியிலும், புறவழிச்சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே ஆக்கிரமிப்பு கடை களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வந்தனர். மேலாளர் செந்தில்குமரன், சங்கர், என்ஜீனியர் சூர்யா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.