திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை ரோட்டில் ஐ.ஜி. தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி, மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் கஞ்சா கடத்திய ராமகிருஷ்ணன்(47), ஆரியராஜா (27),ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, 2 செல்போன், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.