தூத்துக்குடி : தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் என்பவர் துபாய் செல்வதற்காக அவருடைய கிரெடிட் கார்டில் சர்வதேச பண பரிவர்த்தனையை (International Transaction) ஆக்டிவ் செய்து வைத்துள்ளார். அதன் பின்பு கடந்த (24.06.2022), அன்று அவரது செல்போன் எண்ணிற்கு USD2572 (இந்திய மதிப்பில் ரூபாய் 2,09,972/-) அமெரிக்க டாலர் பணம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மேற்படி ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் அவரது கிரெடிட் கார்டை பிளாக் செய்து, cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேஷியஸ் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் மற்றும் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் OTP எதுவும் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சம்மந்தப்பட்ட வங்கி மேற்படி USD2572 (இந்திய மதிப்பில் ரூபாய் 2,09,972/-) தொடர்புடைய பண பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தம் செய்து ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் இழந்த பணத்தை திருப்பி அவருடைய கிரெடிட் கார்டில் வரவு வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் மேற்படி ராமசாமி வெங்கட சுப்பிரமணியனை (15.10.2022) நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணம் வரவு வைக்கப்பட்டதிற்கான ஆவணங்களை வழங்கினார்.
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் சர்வதேச பண பரிவர்த்தனையை (International Transaction) தேவையில்லாமல் ஆக்டிவ் செய்து வைத்திருக்க கூடாது எனவும், ATM Debit Card, Credit Card, Net Banking, E – Commerce போன்ற சேவைகளை அதன் பண பரிவர்த்தனைகளின் உச்சவரம்பை தங்களுக்கு தேவையான தொகையை சம்மந்தப்பட்ட வங்கி மூலமாக நிர்ணயித்து பாதுகாப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.