மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம் – ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்!
நாட்டில் தற்போது தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் காற்று அதிகளவில் மாசடைகிறது. தற்போது காற்று மாசுபடுவதை தடுக்கும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வாகனங்கள் நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாடு காரணமாக காற்று அதிகமான அளவு மாசடைகிறது. குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை காரணமாக காற்று மிகுந்த அளவு மாசடைந்து வருகிறது. இந்த காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய, மாநில அரசுகளின் 15 ஆண்டுகள் பழமையான அனைத்து வாகனங்களையும் ரத்து செய்வதற்கான வரைவு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.
தற்போது இதனை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி தற்போது 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் ஸ்கிராப்பைஜ் கொள்கையை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுப்படி நாட்டில் இருக்கும் நகராட்சி, மையம், மாநிலம் மற்றும் அரசு தன்னாட்சி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருக்கும் வாகனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு ராணுவ வாகனங்களுக்கு பொருந்தாது என்றும் அதாவது 15 ஆண்டுகளுக்கு மேலான ராணுவ வாகனங்கள் உரிமம் ரத்து செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிஜிஸ்டர் பதிவால் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.