மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றி புகழப்படும் ஆரோக் கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி வழிபாடும்
நடந்தது. இந்த வழிபாட்டையொட்டி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை மதுரை உயர் மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் அருட்தந்தை தாமஸ் வெனிஸ் தலைமையில் நடந்தது. மாலை 4மணிக்கு பெரிய சிலுவைப்பாதை வழிபாடும்அதன் பின் 6 மணிக்கு புனித வெள்ளி திருச்சடங்குகள் செய்யப்பட்டது. இந்த புனித வெள்ளி திருச் சடங்குகள் ஆலய அதிபர் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.வளன் தலைமையில் மதுரை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புச்சாமி செய்து மறையுறை வழங்கினார். இதில், திண்டுக்கல், கொடைகானல், நத்தம், பழனி, சிவகங்கை, மதுரை பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் பாதயாத்திரையாக வந்தனர். இதில், கலந்து கொண்டவர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இதில், அன்பியம் அருட்சகோதர, சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி