திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி, அனைத்திந்திய வானொலி நிலையத்தில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜூ அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு ராஜரத்தினம் அவர்கள் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் போலி முகநூல் கணக்கில் இருந்து வரும் நட்பு அழைப்பினை தவிர்க்க வேண்டும் எனவும் இதன் மூலம் தங்களிடம் நட்பாக பேசி, காதலிப்பதாக ஏமாற்றி, வீடியோ பதிவினை சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் பணம் பறிக்கும் கும்பல் தற்போது ஆன்லைனில் சுற்றி திரிவதால் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும் உங்கள் மொபைலுக்கு வரும் தேவையற்ற குறுஞ்செய்திகள் உள்ள link-ல் உள்ளீடு செய்வதன் மூலம் தங்கள் மொபைலில் உள்ள தகவல்களை திருட வாய்ப்புள்ளது. தேவையற்ற செயலியினை பதிவிறக்கம் செய்யவோ சேமித்து வைக்கவோ வேண்டாம். முகம் தெரியாத நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு வங்கி கடன் வேண்டுமென்றால் உடனே தங்கள் ATM கார்டு நம்பர் மற்றும் ATM கார்டு பின்னால் உள்ள மூன்று இலக்கு எண்ணை கூற வேண்டும் என கூறினால், எந்த பதிலும் அளிக்க வேண்டாம்,
அதன் மூலம் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட அதிக வாய்ப்பு உள்ளது.
வங்கி கணக்கிலிருந்து பணமான திருடப்பட்டால் அல்லது ஏமாற்றப்பட்டு இருக்கிறது என்று தெரியவந்தால் உடனே அருகில் இருக்கிற சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று புகார் பதிவு செய்து அக்னாலேஜ்மென்ட் நம்பர் வாங்க வேண்டும் என்றும் மேலும் இது போல் நடக்காமல் இருக்க Temporary block the Account and ATM Card Block செய்ய வேண்டும் என்றும் பின்பு ஏமாற்றப்பட்டதற்கான தேவையான தகவல்களுடன் வங்கி புத்தகம் பரிவர்த்தனை வங்கியில் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொண்டு 1930 என்ற இலவச தொலைபேசி வழியாக புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in ,இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்து கொண்டார்.