திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஜெயராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு பூலாங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த பொழுது அங்கு முறையான அனுமதி இன்றி போலி மதுபானக்கூடம் அமைத்து விற்பனை நடைபெற்றது தெரிய வந்தது. இதையடுத்து இதில் தொடா்புடைய வெள்ளப்பனேரி கீழத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்துபாண்டியன் (32). கருப்பனூத்து மேலத் தெருவைச் சேர்ந்த முருகன் (40). ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.6,000, ரொக்கம் 15 மது பாட்டில்கள், போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்