திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எதிரே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் கோயம்புத்தூரை சேர்ந்த பாலமுருகன் (32). என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















