கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது நல்லூர் ரோடு, சித்தனப்பள்ளி கூடல் நகர் பிரிவு ரோடு அருகே அவ்வழியாக வந்த இரண்டு டிராக்டர்களை நிறுத்திய போது டிராக்டர்களின் ஓட்டுநர்கள் டிராக்டர்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். மேற்கண்ட இரண்டு வாகனங்களை சோதனை செய்ததில் அனுமதியின்றி 5 யூனிட் மண் இருந்தது. அனுமதியின்றி மண்ணை கடத்திய இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது















