திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கும் நபர்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, மாவட்ட காவல்துறை மூலம் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வள்ளியூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது, கோவில் கொடை விழாவிற்காக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் காயம் அடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், வள்ளியூர் காவல் ஆய்வாளர், நவீன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வள்ளியூர் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கியப்பன் (50). உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பேனர் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் அனுமதியின்றி, சட்ட விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர், கட்-அவுட் போன்றவற்றை வைக்கும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்