கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது மேழுமலை கிராமத்தில் மேழு மலை பஸ் ஸ்டாப் அருகே அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி சுமார் 2 யூனிட் கற்கள் இருந்தது கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
















