திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 3, கோடி ரூபாய் பணம் கேட்டு அரிசி ஆலை தொழிலதிபரின் மகன் கடத்தல். தனிப் படையினர் சுற்றி வளைத்து குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் கைது செய்த குற்றவாளிகளிடம் 1,கோடி69 லட்சம்.50. மற்றொரு குற்றவாளியிடம் 20. லட்சம்44, ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த சிவபிரதீப் 22. காடையூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான இன்னோவா காரில் வீர சோழபுரம் அருகில் வந்தபோது எதிரே வந்த டாடா சுமோ காரில் இருந்து இறங்கிய 7 .நபர்கள் பிரதீப் பை கடத்திச் சென்றனர்.
மேலும் சீவபிரதீப்பின் தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என்று தொலைபேசியில் மிரட்டி 3, கோடி ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.3, கோடி ரூபாய் பணத்தை திண்டுக்கல் அருகே உள்ள ஒரு இடத்தில் பணத்தை தந்தவுடன். கடத்திய கும்பல் குற்றவாளிகள் வந்தா சுமோ காரில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சிவபிரதீப் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை தொடர்ந்து கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர். இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் படியும், கோவை சரக காவல் துறை துனண தலைவர் திரு.முத்துசாமி. இ.கா.ப. அவர்களின் ஆலோசனைப்படியும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் இ.கா.ப. அவர்களின் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
துணை கண்காணிப்பாளர்கள் திரு.தன்ராஜ், ஏ.டி.எஸ்.பி. திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சிறப்பு படை சார்பு ஆய்வாளர் திரு.காமராஜ், முதல் நிலை காவலர் திரு.முத்துக்குமார், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் மதுரையில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் சக்திவேல் 37. அகஸ்டின் 45. பாலாஜி38. ஆகிய 3 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் பசீர் 32. என்ற நபரை கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டதாகவும் மீதமுள்ள 3 குற்றவாளிகளை விரைந்து தனிப்படையினர் தேடி வருகின்றனர்.*