திண்டுக்கல்: 11.04.2022 திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரன்பட்டி பகுதியில் கடந்த 11.03.2022 ம் தேதி பாலசுப்பிரமணியன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்து எரித்தனர். இவ்வழக்கு தொடர்பாக சின்னகுழிப்பட்டியைச் சேர்ந்த விமல்ராஜ் (19) என்பவர் உட்பட மூன்று நபர்களை கூம்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குற்றவாளி விமல்ராஜ் என்பவரின் குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய போலீசார் விமல்ராஜ்யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா