சென்னை : சென்னையில் தங்க சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு, போன்ற வழிப்பறி குற்றங்களை தடுக்க அதிரடி சோதனை வேட்டை நடத்த காவல் ஆணைர் திரு. சங்கர்ஜிவால், உத்தரவிட்டார். அதன்பேரில் வழிப்பறி கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளிகள் 574 பேரை பிடித்து காவல்துறையினர் , விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில், சந்தேகத்தின்பேரில் சோதனையும் நடத்தப்பட்டது. இதில் 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 87 பேர்கள் திருந்தி வாழ்வதாக உறுதி மொழி எழுதி கொடுத்து விட்டு சென்றனர். 47 பேர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.