கள்ளக்குறிச்சி: (08.03.2024) -ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா, இ.கா.ப., அவர்களின் நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தமிழ்வாணன், உதவி ஆய்வாளர்கள் திரு.பிரதீப்குமார், திரு.பாலமுருகன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வாரம் மற்றும் தகரை கிராமங்களின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 20 பேரலில் சுமார் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் லாரி ட்யூபுகளில் 140 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், மற்றும் கஞ்சா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.