தூத்துக்குடி: காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களுக்கு ரூபாய் 13,000/- முதல் ரூபாய் 4,000/- வரையிலும், அதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களுக்கு ரூபாய் 15,000/- முதல் ரூபாய் 5,000- வரையிலும் கல்வி பரிசு தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022 – 2023ம் கல்வி ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளுக்கான கல்வி பரிசு தொகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார்.
இந்த கல்வி பரிசுத்தொகை 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலைமை காவலர் திரு. சேதுராஜன் மகள் விஜிதா, முதல் நிலை காவலர் திரு. முத்துராமலிங்கம் மகள் முனிய தர்ஷினி, தலைமை காவலர் திரு. குமார் மகள் காவியா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. வில்சன் மகள் வர்ஷினி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பிரமணியன் மகள் சுபிக்ஷா, தலைமை காவலர் திரு. பிரின்ஸ் பர்னபாஸ் மகன் அம்சன் மேத்யூ, அமைச்சுப்பணி தட்டச்சர் திருமதி. கார்த்திகா மகன் ஒளிமுத்து பிரகாஷ், தலைமை காவலர் திரு. முனியசாமி மகள் நந்திகா ஸ்ரீ, தலைமை காவலர் திரு. மாரிக்குமார் மகள் சரண்யா, தகவல் பதிவு உதவியாளர் திருமதி. சந்திரமதி மகன் அனுஷ் ஆகிய 10 பேருக்கும்,அதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலைமை காவலர் திரு. நிறைகுளத்தான் மகள் இலக்கியா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மார்தாண்ட பூபதி மகள் அபிநயா, தலைமை காவலர் திரு. காமராஜ் மகள் சிவரசிகா, தலைமை காவலர் திரு. பிரபு மகன் ஜெமில்டன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கோபாலகிருஷ்ணன் மகன் கண்ணன், தலைமை காவலர் திரு. சுடலைமுத்து மகள் சிநேகா, வரவேற்பாளர் திருமதி. சுமதி மகன் திரு. முத்துசெல்வம், தலைமை காவலர் திரு. பாலமுருகன் மகன் முகேஷ்குமார், முதல் நிலை காவலர் திருமதி. சித்ராதேவி மகள் ஆர்த்தி கனிமொழி, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. முத்துராக்கு மகன் பிரவின்ராஜா ஆகியோருக்கு கல்வி பரிசுத்தொகையை இன்று (18.01.2024) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கி, அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்கணிப்பாளர் திரு. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.