திருவள்ளூர் : மீஞ்சூர் அருகே உள்ள காட்டூரில் போதை விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை நடத்திய இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். காட்டூர், வாயலூர், பழவேற்காடு கோட்டைக்குப்பம், நெய்தவாயல், நந்தியம்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பதினைந்து அணிகள் இதில் பங்கேற்றது. இறுதி போட்டிக்கு காட்டூர் அம்பேத்கர் அணியும் கோட்டைக்குப்பம் அணியும் மோதின. இதில் கோட்டைக்குப்பம் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. இந்த வெற்றி பெற்ற அணிகளுக்கு காட்டூர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வெற்றிக் கோப்பையையும் வழங்கினார். அதானி மக்கள் தொடர்பு அலுவலர் ஜேசுராஜ் வரவேற்ற இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி, அதானி ஒருங்கிணைப்பாளர் ஹேமந்த் உள்ளிட்டோர் இதில் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு