திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தளபதி சமுத்திரம் கீழூர், நாடார் தெருவை சேர்ந்தவர் தங்க பெருமாள். அதே தெருவில் குடியிருந்து வரும் அவருடைய சகோதரர் சுடலைமணியின் மனைவி அனி டெல் பாய். (25). ஆகிய இருவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் (07.11.2024) அன்று அனி டெல் பாய் அவருடைய வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த தங்கப்பெருமாள் முன் விரோதத்தில் அவரை அருவாளால் காதிலும் கழுத்திலும் வெட்டி விட்டு, தடுக்க வந்த தன்னுடைய தம்பி பிரவீனையும் தந்தையையும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அனி டெல் பாய் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் சுதா வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தங்கப்பெருமாளை தேடி வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்