கடலூர் : தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு) முனைவர் மகேஸ்வர் தயாள், ஐ.பி.எஸ்., அவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வின் போது விழுப்புரம் சரக துணைத் தலைவர் திரு. Ara. அருளரசு, ஐ.பி.எஸ்., மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., ஆகியோர் பூங்கொத்து வழங்கி அவரை மரியாதையுடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறையின் செயல்பாடுகள், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் உயர் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
















