மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் அவர்களும்,மாநகராட்சி ஆணையர்,மற்றும் தென் மண்டல தலைவர் அவர்களும் ,88 வது வார்டு அரசு பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டனர். AGM குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக,உயர்திரு. தலைவர் பாண்டியராஜன் அவர்கள், மற்றும் சங்க துணை தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் உடன் இருந்தனர், AGM குடியிருப்பு பகுதிகளுக்கு மக்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகள் பாதாள சாக்கடை குடி தண்ணீர் தெரு விளக்கு சாலை வசதி ஆகியவை வேண்டுமென்று,மதுரை மாநகராட்சி மேயர் அவர்களிடம் முறையாக மனு கொடுக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் தற்போது குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதி பூண்டு உள்ளார்கள். அதிவிரைவில் அனைத்து விதமான பாதாள சாக்கடை சாலை வசதி தெரு மின்விளக்கு இதுபோன்று அனைத்து விதமான வசதிகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதி கொடுத்து உள்ளார்கள்.
விருதுநகரிலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. முனியாண்டி