செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் அமைந்துள்ள தலைமை அஞ்சலகத்தில் காசநோய் பிரிவு , மாநில காசநோய் மையம் , துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசம்) மற்றும் அவர்களின் வழிகாட்டுதலின்படி 100 நாட்கள் காச நோய் விழிப்புணர்வு (டிச.7 முதல் மார்ச் 24 வரை) நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக அஞ்சல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய முத்திரை வெளியீடு, பணியாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் அஞ்சல்துறை கண்கானிப்பாளர் சண்முகச்சாமி, தலைமை அஞ்சல் தலைவர் .வசந்தி மற்றும் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசம்) மரு.காளீஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் நலக்கல்வியாளர் பாபு சுதந்திரநாத், காசநோய் ஒருங்கிணைப்பாளர் (PPM) . சஞ்சனா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் , சுகாதார பார்வையாளர், நடமாடும் நுண்கதிர்வீச்சு குழுவினர் மற்றும் சுமார் 70 அஞ்சல்துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்