திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்பட்டிமலை சாலையில் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கனகராஜ்(35). என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் நீளமான வாளுடன் நடந்து செல்வது போன்று வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது குறித்து கனகராஜ் மீது (29.10.2024)ஆம் தேதி பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்