திண்டுக்கல்: திண்டுக்கல் சாலை பழனி நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் வாகனத்தில் 1 இளைஞர் 3 பெண்களை ஏற்றிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியை தொடர்ந்து பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். தனன்ஜெயன் உத்தரவின் பெயரில் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர். கவிதா வாகன உரிமையாளரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு மேலும் இது போன்று வாகனம் இயக்கினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து அனுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட நகர் துணை கண்காணிப்பாளருக்கும், போக்குவரத்து காவல் துறையினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த சமூக ஆர்வலர்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா