மதுரை: 85-வது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த (12.01.2026) முதல் (16.01.2026) வரை சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த திறமையான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களின் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் மதுரை மாவட்ட ஆயுதப்படை அத்லெட்டிக் கிளப்பில் பயிற்சி பெற்று வரும் ஓ. பமிலவர்ஷினி (திருமதி ஓ. மகாதேவி, SSI அவர்களின் மகள்) நீளம் தாண்டுதல் (Long Jump) போட்டியில் சிறப்பாக செயல்பட்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B. K. அரவிந்த், ஐ.கா.பா., அவர்கள் மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவருக்கு பயிற்சி அளித்து வந்த திரு. B. சந்துரு, தலைமை காவலர் அவர்களையும் சிறப்பாக பாராட்டி, தொடர்ந்து விளையாட்டு துறையில் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த வெற்றி மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















