இராமநாதபுரம்: இராமநாதபுரம் உட்கோட்டம், இராமநாதபுரம் நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், குற்ற நிகழ்வுகளை கண்டறிவதற்காகவும், நீதிமன்றங்களில் புகைப்படக் காட்சிகள் மூலமாக நிரூபிக்கப்படுவதற்காக இராமநாதபுரம் நகரில் இயங்கும் காவல்துறை ரோந்து வாகனங்களில் MNVR (Mobile Network Video Recorder) பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் 1)தானாக அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுசெய்யும், 2)மேற்படி வாகனத்தில் உள்ள GPS Speciality மூலம் வாகனம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்,3)பல வாகன கேமராக்களை ஒருங்கிணைத்து இணைய சேவை மூலம் ஒரு கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்து, மேற்படி வாகனம் குற்ற நிகழ்விடத்திற்கு சென்றுள்ளதா என சோதனை செய்ய முடியும், 4) இந்த கேமராக்களில் பொறுத்தப்பட்டுள்ள தகவல் சேமிப்பு கருவி (Hard Disk) சேதமடையாது.
5)இந்த கேமராக்கள் மூலமாக இரவு நேர நிகழ்வுகளை தெளிவாக பதிவு செய்யலாம். மேற்படி கேமராக்கள் பொறுத்தப்பட்ட 03 ரோந்து வாகனங்கள் (03.09.2024)-ம் தேதி இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், இ.கா.ப அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் காவல்துறை ரோந்து வாகனங்களுக்கு MNVR (Mobile Network Video Recorder)கேமராக்களை ஏற்பாடு செய்த இராமநாதபுரம்மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சிவராமன்,IPS., அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஸ் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி