மதுரை : அலங்காநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு அரிசி, பருப்பு, பிஸ்கட், மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ADSP திரு. கணேசன் அவர்கள் ஏற்பாட்டின் பேரில், மதுரை காவல் சரக DIG. திருமதி. ஆனி விஜயா.IPS., அவர்கள் தலைமையில், சமயநல்லூர் DSP திரு. ஆனந்த் ஆரோக்கியராஜ், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் திருமதி. நிர்மலா, மேல சென்னம்பட்டி அன்னை பழனியம்மாள் அறக்கட்டளையை சேர்ந்த Dy. Collector (Rtd) திருமதி. ருக்மணி, அலங்காநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. முருகேஸ்வரி, முடுவார்பட்டி திரு. நல்லியப்பன், திரு. சம்பத், திரு. செளந்தர ராஜன், திரு. ஜோதி முருகன், திரு. செங்கோடன் மற்றும் திரு. சுப்பிரமணி ஆகியோர் மூலமாக வழங்கி உதவி செய்தனர். மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.