திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் புறநகர் டி.எஸ்.பி. உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் மற்றும் புறநகர் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கொண்ட தனிப்படையினர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன் (எ) ராஜா(38). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















