மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் , தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக , பேரிடர் மேலாண்மை துறையும் இணைந்து முதல் நிலை செயல்பாட்டாளர்களுக்கு , பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி
வகுப்பிற்கு தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார்கள் புவனேஸ்வரி, மவுண்ட்பேட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வகுப்பில், வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மழை வெள்ளம் பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை பற்றியும் அவற்றிலிருந்து, பொது
மக்களை மீட்பது பற்றியும் பயிற்சியளித்தனர். இதில், கிராமங்களில்,
தன் ஆர்வத்துடன் செயல்படும் முதல் நிலை செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வருவாய் ஆய்வாளர் ராமர் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி