திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் கடந்த 2014 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், நடுப் பேட்டை தெருவை சேர்ந்த அஷ்ரப் அலி (43). கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 9 மாதங்களாக அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி அஷ்ரப் அலியை கங்கைகொண்டான் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (03.02.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்