மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகர் பகுதியில், கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் பணி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள நாட்டுநலப்பணிகள் திட்ட மாணவ மாணவிகள், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து பல்கலைக்கழகங்கள் சார்பில் நடைபெற்று வரும் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் முகாமினை, உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் துவங்கினர். இந்த மெகா கிளினிங் பணியை, உசிலம்பட்டி காவல் சரக டிஎஸ்பி செந்தில்குமார், கோடி அசைத்து துவக்கி வைத்தார். உசிலம்பட்டி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் நெகிழி பைகள், குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக்கினர். நகரை சுத்தப்படுத்தி தூய்மையாக மாற்றிய மாணவ மாணவிகளுக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி