திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்த தினகர் (24), இவர் அணைப்பட்டி அருகே உள்ள சொக்குபிள்ளைப்பட்டி பிரிவில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (25), என்பவர் சட்டையில் இருந்த ரூ.1000-ஐ எடுத்துக்கொண்டு தினமும் இதேபோல் குடிப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும். இல்லைஎன்றால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தினகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய சத்தியமூர்த்தியை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.