செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாதி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதி சக்தி உடனுறை ஆதி லிங்கேஸ்வரர் திருக்கோவிலின் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ உத்தர கற்பக விநாயகர் ஆலயம் நவகிரக ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேகமும் நடைபெற்றது.இவ் அபிஷேகத்தில் விக்னேஸ்வர பூஜை கலச பூஜை மகா கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் வேத பாராயணம் கலசாபிஷேகம் மகாபிஷேகம் மகாதீபாரதனை மற்றும் அன்னதானம் வழங்குதல் போன்றவை சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்த கோடி பெருமக்கள் ,ஆன்மீக அன்பர்கள் அநேகர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்