திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா மற்றும் காவலர்கள் சார்பில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணினி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும், இணையதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்தும் படியும், மேலும் இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் செய்ய 1930 என்ற எண்னை அழைக்கும் படியும், இணையதளம் வாயிலாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தும் படியும் அறிவுரை கூறியும், துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















