திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (38), இவர் தேங்காய் மட்டை கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இங்கு இருந்த கம்பரசர், 2 மின் மோட்டார் மற்றும் 3 இரும்பு கதவுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அழகர்சாமி சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் லட்சுமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (35), கண்ணன் (27) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.