மதுரை : மதுரை மாவட்டத்தில், குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென்மண்டல காவல்
துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட காவல் கண்
காணிப்பாளர் அர்விந்த், இவர் மதுரையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய இருசக்கர வாகனம் ரோந்துகளை இயக்க உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில், அலங்காநல்லூர் காவல் நிலைய சரகம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகம் போன்ற முக்கியகாவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், ஆயுதம் ஏந்திய இரு சக்கர ரோந்து நியமித்து, சட்ட விரோத செயல்கள் பற்றியும், சமூக விரோதிகளின் நடமாட்டம் பற்றியும் கண்காணித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், திருமங்கலம், சமயநல்லூர், கருப்பாயூரணி, ஒத்தக்கடை, மேலூர், விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோக்கள், பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை கூவி, கூவி அழைத்து ஆட்டோவில் ஏற்றுவதால், பஸ் பயணம் செய்ய பஸ் நிறுத்தத்தில், காத்திருக்கும் பயணிகள் பெரிய இடையூறாக உள்ளதாம். மேலும், பல ஆட்டோக்கள் உரிய பெர்மிட் இன்றி வழித்தடங்களில் இயக்கப்படுவதாகவும், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி., மதுரை மாவட்டத்தில் பயணிகள் பஸ் நிறுத்தம் செய்யும் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே,கோரிக்கை ஆகும்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி