திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், விருவீடு காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதி வடிவேல்புரத்தை சேர்ந்த பெருமாள்(52). இவர் சொத்து பிரச்சனை காரணமாக தனது சகோதரன் முத்தையாவை கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்ததாக விருவீடு காவல்துறையினர் பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கானது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அவர்கள், பெருமாளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 20,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















