திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியான பிரவீன்குமார் என்பவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு குடிசை வீடு தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் குடிசை வீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் என சுமார் 2லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகினது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடு தீக்கிரையானது சம்பவம் குறித்து தகவலறிந்த பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் நேரில் சென்று நிதி உதவியும் அளித்து ஆறுதல் கூறினார். மேலும் ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வாங்கிட வழிவகை செய்தார். அவருடன் மீஞ்சூர் தி.மு.க முன்னாள் பேரூர் கழக செயலாளர் நா.மோகன்ராஜ் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் நாலூர் சிலம்பரசன், நவீன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு