திருவள்ளூர்: ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஹெல்மெட் அணிய வேண்டும், சீட்பெல்ட் அணிய வேண்டும், மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது உட்பட சாலை பாதுகாப்பு விதிகள் எடுத்துரைக்கப்பட்டன. இதில் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு