திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்(10.10.2024) ம் தேதி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., தலைமையில், காவலர்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மனுக்கள் அளித்த காவலர்களின் அனைத்து குறைகள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என மாநகர காவல் ஆணையர் உறுதியளித்தார். மேலும் துறை சம்பந்தமாக எந்த கோரிக்கையாக இருந்தாலும் தன்னை எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும் தெரிவித்துக் கொண்டார். இம்முகாமில் காவல் துணை ஆணையர், G.S.அனிதா, (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்