இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் திரு.கனகசபாபதி என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே தனது கடின உழைப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.